Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக மின்வாரியமே சம்பளம் வழங்கிடவேண்டும். சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை.

0

'- Advertisement -

ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக மின்வாரியமே சம்பளம் வழங்கிடவேண்டும்.சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை.

Ad banner

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல குழு கூட்டம் கரூர் பைபாஸ் ரோடு வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. மண்டல குழு கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் எஸ். ரெங்கராஜன் தலைமை தாங்கினார். சங்கத்தின் வேலை அறிக்கை யை மண்டல செயலாளர் அகஸ்டின் முன்மொழிந்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று திருச்சி வட்ட செயலாளர் பழணியாண்டி பேசினார். கூட்டத்தில் புதுக்கோட்டை வட்ட செயலாளர் நடராஜன், பெரம்பலூர் வட்ட செயலாளர், இளங்கோவன் திண்டுக்கல் வட்ட செயலாளர் திருமலை சாமி, மற்றும் நான்கு மாவட்டங்களில் இருந்து மண்டல குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

தமிழ்நாடு அரசாங்கம் அண்மையில் மாநகராட்சி நகராட்சிகளில் தூய்மை பணியை தனியாரிடம் டெண்டர் விடுவதை ரத்து செய்துள்ளதை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வரவேற்கிறது, அதேபோன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளிக்கு ரு.1035 தினக்கூலி இ எஸ் ஐ பி எப் உடன் வழங்கிட உத்தரவு போட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கூலி என்பது ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படுவதால் அறிவிக்கப்பட்ட கூலி முழுமையாக வழங்கப்படாமல் மிகவும் குறைவான கூலியே ஒப்பந்த தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் இந்த நிலையை மாற்றிட தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நேரடியாகவே மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தின கூலி வழங்கிட வேண்டும்.

TVK ad

ஸ்டார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுவதாக தமிழக மின் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கிறோம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைத்து வருகின்ற 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை மாநாட்டில் பெருமளவு மின்வாரிய ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொள்ளச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

14.7.26 அன்று ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கி நிரந்தரப்படுத்திட மண்டலத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

முடிவில் திருச்சி வட்ட தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.