திருச்சி : பங்கு வர்த்தகத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த
ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி.
திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை .
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 65)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி.
இவரது இரண்டாவது மகனின் நண்பர் ஒருவர் மூலமாக சென்னை தியாகராய நகர் முருகேசன் தெரு பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தன்னை அறிமுகம் செய்தார். மேலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.. இதை நம்பிய ஆரோக்கியசாமி ,
ஓய்வு பணப்பலன் ரூ.60 லட்சம் மற்றும் சேமிப்பு பணம் என ரூ.1 கோடி பணத்தை வபல்வேறு தவணைகளாக 2022 – 23 காலகட்டங்களில் பார்த்திபன் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு எந்த லாபத் தொகையும் கிடைக்கவில்லை அதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார் அதற்கு பார்த்திபன் இன்று வரும் நாளை வரும் என கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இழுத்து அடித்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆரோக்கியசாமி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மோசடி செய்த பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்: அதைத் தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் புகார் கூறப்பட்ட பார்த்திபன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

