திருச்சி: வாய்க்கால் கரையில் வாசன் வேலி ரியல் எஸ்டேட் உரிமையாளரால் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றக் கோரி வி.தொ.ச. கண்டன ஆர்ப்பாட்டம் .
திருச்சி .வாய்க்கால் கரையில் வாசன் வேலி ரியல் எஸ்டேட் உரிமையாளர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றக் கோரி வி.தொ.ச. கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அமையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை பாகுபடுத்தும் விதமாக, வாய்க்கால் கரையில் வாசன் வேலி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும்
விளைநிலங்களாக இருக்கும்போது வாய்க்கால்களும் வரப்புகளும் பொதுமக்களுக்குப் பயன்படும் பொதுச் சொத்தாக உள்ளன. ஆனால், அந்நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போது ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாய்க்கால்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
வாய்க்கால் கரையில் கட்டப்பட்டுள்ள இச்சுவர் பட்டா இடத்தில் இருப்பதாக வட்ட நிர்வாகம் கூறுகிறது. மேலும், வாசன் வேலியில் மனைப் பிரிவுகளைக் கிரையம் பெற்றவர்களுக்குப் பட்டா வழங்காமல், ‘வாய்க்காலைக் கிரையம் பெற்றுள்ளீர்கள்’ எனக் கூறி அலட்சியப்படுத்துவதைக் கண்டித்தும் அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, மாவட்டப் பொருளாளர் இளங்கோவன், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தமிழ்வாணன், ஒன்றியத் தலைவர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

