திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக கட்சியின் மாவட்ட நிலை குழு உறுப்பினர் தோழர் ராமாயி தலைமையில்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறும் விதமாக மோடியே பதவி விலகு என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CPI (ML) கட்சியின் வையம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமதாய், சீதா, வெள்ளையம்மாள், வசந்தா, மனோகரன், சந்திரா, காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகிக்க CPI (ML) கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் தங்கராஜ் ,பாலு, வின்சென்ட் , ஜோதி பாசு,பாலகுமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க CPI (ML) மாவட்ட செயலாளர் தோழர்.ராஜ்குமார் மாநில நிலை குழு உறுப்பினர் தோழர் ஞான தேசிகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட கோரியும்.
வாரந்தோறும் சட்ட கூலி முழுமையாக வழங்குவதை உறுதிப்படுத்திட கோரியும்
ஐந்து வருட முதல் ஏழு வருட வரை ஒரே இடத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர் அனைவரையும் மாற்றம் செய்திடக்கோரி
100 நாள் வேலையில் பணித்தள பொறுப்பாளர்கள் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு பகுதி சம்பளத்தை மட்டும் கொடுப்பதாக பொதுமக்களிடம் இருந்து வரும் கருத்துக்களின் அடிப்படையில் ஆய்வு செய்திடவும்
வீடில்லா அனைவருக்கும் வீட்டுமனை வழங்கிடவும், வீடு இருந்தும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிடவும் இளங்காகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் அதனை இடித்துவிட்டு புதிய நீர் தேக்க தொட்டி கட்டிக் கொடுத்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் பாரதியார் நகர், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சிமெண்ட் சாலைகளை சரி செய்து சாக்கடை நீர் செல்வதற்கு ஏதுவாக முறையான சிமெண்ட் சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

