திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான் தெருவை சேர்ந்தவர் அப்துல் பின் வாஹித் அன்சாரி இவரது மனைவி தஸ்லிமா பானு (வயது 40) இவர் ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில் அவரது உடைமைகளை விமான நிலைய ஸ்கேன் பிரிவு ஊழியர்கள் தணிக்கை செய்தனர். அப்பொழுது அந்த பெண்மணியின் உடமையில் இந்திய ரூபாய் 65 லட்சமும், வெளிநாட்டு ரூபாய் 25 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ 90 லட்சம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக பயணியை விமான நிலைய ஸ்கேன் பிரிவு ஊழியர்கள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இது தொடர்பாக சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்
இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

