Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிராட்டியூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி பல்லுயிர் மையமாக மாற்றும் பணியில் சூழலியல் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியை தொடங்கி உள்ளனர்

0

'- Advertisement -

பல்லுயிர் மையம் சார்பில் பிராட்டியூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி பல்லுயிர் மையமாக மாற்றும் பணியில் பல்வேறு சூழலியல் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியை தொடங்கி உள்ளனர்.

Ad banner

அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் பல்வேறு சூழலியல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ( 05.07.26 ) காலை 7.00 மணிக்கு “வாங்க நடக்கலாம், பசுமை நடை” நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கே. ஆர். ஜி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பல்லுயிர் மையம் ஒருங்கிணைப்பாளர் கே.ராஜகோபால் தலைமையில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே. சி நீலமேகம் முன்னிலையில் பசுமை நடை நிகழ்வு நடைபெற்றது.

“இயற்கையோடு இணைவோம்… பல்லுயிர்களைக் காப்போம்…” என்ற முழக்கத்துடனும், “ஒவ்வொரு அடியும் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொரு மரமும் எதிர்காலத்திற்கு” என்ற கருத்தை வலியுறுத்தி இந்த பசுமை நடை அமைந்தது.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் முனைவர் கி. சதீஷ்குமார் ஒருங்கிணைப்பில் சிலம்பாட்டம், பறை இசை விழிப்புணர்வு நிகழ்வு நடைப் பயணத்தில் நடைபெற்றது

தொடர்ந்து இப்பயணத்தில் திரு. மோகன் திரு. ரவிச்சந்திரன் பிஷப் ஈபர் கல்லூரிப் பேராசிரியர்கள், சேயோன் யாழ் வேந்தன் மற்றும் பறை இசை இசை திரு ஆகாஷ், சிபி ரிச்சர்டு,சிலம்பம் கோகுல்ராஜ் சஸ்வின், யாழினி, ஜெயப்பிரகாஷ் சுகித்தா, சுஜித்,அசோக்,தவசி, டாஸ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிறார்களும் பல சூழலியல் ஆர்வலர்களும் பசுமை நடையில் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.