Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி.

0

நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி

திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் பார்க்வகுல முன்னேற்ற சங்கம் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி.பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .


அப்போது அவர் கூறியதாவது:

பெரம்பலூரில் 3 வருட காலத்தில் செய்துள்ள நலத்திட்டங்களை குறித்து புத்தகமாக வெளியிட உள்ளேன்.

பெரம்பலூரில் ரயில் பாதை அமைப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசிடன் கோரிக்கை வைத்து வருகிறேன்.

மோடி என் பங்காளி அல்ல. ஆனால் நாட்டுப்பற்று மிக்கவர். உழைக்கும் எண்ணம் கொண்டவர்.
சிறுபான்மையினருக்கு எதிரானவர் என தவறாக கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது. விரைவில் தமிழகத்தில் அவரை ஏற்று கொள்வார்கள்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தவறில்லை.போட்டி தேர்வை எதிர்கொள்ள அடிப்படை கல்வி தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் அன்பு துரை, ஐ.ஜே.கே மாவட்ட தலைவர் ரகுபதி, நிர்வாகிகள் கனகராஜ், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.