Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் லாட்டரி விற்ற முதியவர் உட்பட 6 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி நடவடிக்கையில்கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர். லாட்டரி விற்ற முதியவரும் கைது.

Ad banner

திருச்சி துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கீரம்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்கபெருமாள் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சிங்கபெருமாள் ஏற்கனவே துறையூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்றதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

துறையூர் காரைமேடு பகுதியில் ஜமால் (வயது 42),

ஜம்புநாதபுரம் மேலக் கொட்டம் பகுதியில் அவிநாசி (வயது 61),

காட்டுப்புத்தூர் நத்தம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் நடேசன் (67),

மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்திரசேகர் (வயது 52),

வளநாடு பாலக்குறிச்சி பகுதியில் செல்வம் (38) ஆகிய 5 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாட்டரி விற்ற முதியவர் கைது :

ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கடியாக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 65) என்பவரை ஜீயபுரம் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன் மற்றும் ரூ. 8,710 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.