திருச்சி: ரெயிலில் அடிபட்டு இறந்த மூதாட்டி யார் ? ரெயில்வே போலீசார் விசாரணை
திருச்சி ரெயில் நிலையத்திற்கும் பெட்டவாய்த் தலை அருகே குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவ்வழியே வந்த ஒரு ரெயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
தகவல் அறிந்து திருச்சி ரெயில்வே
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி அடையாளம் காணவும், பிரேத பரிசோதனை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்பு கொள்ள வேண்டிய எண் :90805 63321 மற்றும் 94434 72524

