Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக வை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். திருச்சியில் மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி

0

'- Advertisement -

திருச்சியில் மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறிய போது –

Ad banner

இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், S.R.பொம்மை எதிரியை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும். ஆளுநர் தனிப்பெரும் கட்சியினை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர, ஆளுநர் மாளிகை அல்ல. தமிழக ஆளுநர் உடனடியாக, த.வெ.க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

தனி மெசாரிட்டியை நிரூபிக்க கோருவது, ஆளுநரின் அதிகார வரம்பு மீறிய செயல்.பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்ஆளுநர். இது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக ஆளுநர், உடனடியாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என மக்கள் சமூகநீதி பேரவை சார்பாக, அறிவிப்பு அனுப்பியுள்ளோம். வருகிற 11.05.2026 அன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யவுள்ளோம்.

இது தொடர்பாக மக்கள் சமூகநீதி பேரவை சார்பாக, தமிழக முழுக்க ஆளுநரை கண்டித்து சுவரொட்டி ஒட்டியுள்ளோம். வருகிற 11.05.2026 அன்று த.வெ.க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளோம்.

மாநில அரசுக்கு சுயஆட்சியில் , உண்மையான அக்கறை இருந்தால் , ஆளுநரை கண்டித்து தி.மு.க ஸ்டாலின் போராடவேண்டும். இல்லையேல், தி.மு.க-விற்கும். பா.ஜ.க-விற்கும் கள்ளக்கூட்டு உள்ளது என்பதை மக்கள் புரிந்துக்கொள்வார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல், மீண்டும் தமிழ்நாட்டில் ஜென்சி புரட்சி வெடிக்கும் என ஆளுநருக்கு எச்சரிக்கிறோம்.

என மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.