திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிக்கு வலை
திருச்சி கண்டோன்மெண்ட் கருமண்டபம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மலர்விழி (வயது 54) கடந்த 12 ந் தேதி அன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் பாலசுப்ரமணியனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 9 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மலர்விழிக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து மலர்விழி தனது இல்லத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். இது குறித்து மலர்விழி கண்டோன்மென்ட்காவல் நிலைய போலீசார் இடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் கண்டம் ஆண்டு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து 9 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

