Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று நடைபெற்ற தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர் நல சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் …..

0

'- Advertisement -

சிபிஎஸ் திட்டத்தில் பணி நிறைவு பெற்ற தகுதி உள்ளவர்கள்  டிஏபிஎஸ் திட்டத்தை

Ad banner

தேர்வு செய்ய அரசாணையில் திருத்தம் வேண்டும்

தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழக அரசுக் கல்லூரி பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாநிலத் துணைத்தலைவர் முனைவர் யூனஸ் வரவேற்றார், நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் முனைவர் ஜோசப் ஜான் தலைமை தாங்கினார்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, சி பி எஸ் ஒழிப்பு இயக்கத்தின் தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உறுப்பினர்கள் கேட்கும் வினாக்களுக்குத் தெளிவான விளக்கங்களையும் வழங்கினார்கள்.

விழாவில் மாநிலச் செயலர் முனைவர் தி.ந. இரவி சங்கத்தின் நடவடிக்கைகள், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். பின்பு மாநில பொருளாளர் கோபண்ணசாமி வரவு செலவுக் கணக்குகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

இணைச்செயலாளர் அன்பழகன்,மா சுப்புரத்தினம் துணைத்தலைவர் சுப்புரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

எந்த வித மாத ஓய்வூதிய பலன்களையும் பெறாமல் சி.பி.எஸ் திட்டத்தில் பணி நிறைவு பெற்ற தகுதியுள்ள அனைவரும் டி.ஏ.பி. எஸ். திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணையில் திருத்தம் கொண்டு வரவேண்டும். மேலும் தெரிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படாமல், ஓய்வுக்கால பணப்பலன் வழங்கியவற்றில் அரசின் பங்களிப்பு(வட்டியுடன்) பணத்தினை அரசிற்கு திரும்ப வழங்கிட உள்ள ஊழியர்கள் வசம் மீளப்பெற்று, டி ஏ பி எஸ் திட்டத்தினில் சேர்த்திட, வழிவகையினை ஆவன செய்ய வேண்டுமென இச்சங்கம் வலியுறுத்துகிறது.

டி.ஏ.பி.எஸ் -ஐத் தெரிவு செய்யாத மற்றும் குறைவான காலமே பணியாற்றிய ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, அவர்களது வயது முதிர்வைக் கவனத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அகவிலைப்படியுடன் கூடிய உரிமை ஓய்வூதியத்தை வழங்கிட, தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

கடந்த 01-04-2003 – க்குப் பிறகு சி.பி.எஸ் திட்டத்தில் பணியில் சேர்ந்து இயற்கை எய்திய அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

எவ்வித மாதாந்திர சம்பள வாழ்வாதாரமுமின்றி தவிக்கும், கடந்த 01-04-2003-க்குப் பிறகு சி.பி.எஸ் திட்டத்தில் பணியில் சேர்ந்து, பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் முறையான ஓய்வூதிய வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடும் வரை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற அனைத்து வகை ஊழியர்களுக்கும், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

இறுதியாக சங்கத்தின் இணைச்செயலாளர் (மகளிர்) முனைவர் அருணா நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.