திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ‘Alumni Meet ’26’ கோலாகலமாக நடைபெற்றது
திருச்சி: தாயனூர் திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியில் (CARE College of Engineering) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ‘Alumni Meet ’26’ நிகழ்வு நேற்று சனிக்கிழமை (அக். 3 ) அன்று கல்லூரி வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கேர் கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ப்ரதிவ் செந்த் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சாந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி புலன்மையாளர்கள் (Deans), அனைத்துத் துறைத் தலைவர்கள் (HODs), பேராசிரியர்கள் மற்றும் திரளான முன்னாள் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்களை வரவேற்கும் பதிவுகளுடன் மாலை 3.00 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து துறை சார்ந்த உரையாடல்கள், சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பழைய நினைவுகளையும் நட்பையும் புதுப்பிக்கும் வகையில் அமைந்த இந்த விழாவில், கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் திரளான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலை குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, இரவு சுவையான விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

