Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் மையத்தை திருச்சி ஆணையர் பொன்மணி பார்வையிட்டார்

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பசுமை பரப்பை அதிகரிக்க 5 மண்டலங்களிலும் மரக்கன்றுகள் வளர்ப்பு மையம் மாநகராட்சி ஆணையர் பொன்மணி தகவல்

 

Ad banner

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 1, வார்டு எண் 4, 2 அம்பேத்கர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நாற்றங்கால் கொட்டகை அமைத்து ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் மையத்தை ஆணையர் பொன்மணி அவர்கள் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதே போல 4 மண்டலங்களிலும் கொட்டகை அமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பு மையம் அமைக்கப்படஉள்ளது. இதில் நிழல் மற்றும் பூ பூக்கும் மரங்கள் வேம்பு, பூவரசு, வெப்பாலை, குல்மோஹர், சரக்கொண்டாரி, நீர்மருது, மகாகனி, பரம்பை உள்ளிட்ட மரம் கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

 

மாநகராட்சி வெப்ப அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மாநகரிளல் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுப்பட்டும் மற்றும் குறுங்காடு திட்டங்களை செயல்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலையோர பகுதிகள், ஆற்றுக்கரையோரம் குறுங்காடுகள் போன்ற இடங்களில் 45சதவீதம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.