Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம்,மகேஸ் பொய்யாமொழி தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

0

'- Advertisement -

மலைக்கோட்டை தேரோட்டம் திருச்சியின் மிக முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Ad banner

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா, ஏப்ரல் 20 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது ,

 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம், இன்று புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ கோஷம் இட பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருவரம்பூர் தொகுதி வேட்பாளரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார் .

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் இனிகோ இருதயராஜ், பகுதி செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கருணாநிதி , ஸ்ரீதர் . கோவிந்தராஜ், கலைசெல்வி

மற்றும் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேர்களில் தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலம்மை அம்மன் எழுந்தருளி மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.