Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பீமநகர் ரஃபிக் கடும் கண்டனம்.

0

'- Advertisement -

UTJ வின்  தலைவர் பீம நகர் ரஃபிக் கண்டன அறிக்கை…..

Ad banner

பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு UTJ வின் கடும் கண்டனம்.

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று மதவாதத்திற்கு எதிரான மக்களுடைய வாக்குகளை அதாவது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சிறும்பான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாய மக்களின் வாக்குகளை பெற்று ஐந்து இடங்களில் வென்று தற்போது 108 இடங்களை வென்று ,குறிப்பாகஇந்த நாள் வரையிலும் பாசிச பாஜகவை முழுமையாக எதிர்க்காத தவெக விற்கு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது மேலும் வெவ்வேறு மாநிலங்களில் பாஜக செய்யும் அதே சந்தர்ப்பவாத துரோக அரசியலை அப்பட்டமாக தற்போது செய்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படி அதிகாரத்தை மட்டுமே விரும்பி கொள்கை நோக்கமில்லாமல் செயல்பட்டுள்ள காங்கிரஸ் தேசிய தலைமை சற்று சிந்திக்க தவறியது என்னவென்றால் கடந்த காலங்களில் மதவாத சக்திகளுக்கு எதிராக தேசிய அரசியலில் பக்க பலமாக தங்களுக்கு வலிமையாக இருந்த ஒரே மாநில கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் மதவாதத்தை எதிர்த்து வாக்களித்த அந்த ஐந்து சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கும் பச்சை துரோக அரசியல் செய்த தங்களுடைய காங்கிரஸ் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாமிய மக்கள் நம்ப தயாராக வில்லை என்பதனைத் தெரிவித்து, தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணியை இன்ஷாஅல்லாஹ் நம்முடைய தமிழக மக்களின் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் முன்னெடுக்குமாறு இஸ்லாமிய மக்களின் குரலாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக( UTJ ) சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைவர்  பீமநகர் S.ரபீக்(ஆலிம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.