Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்.

0

 

இன்று நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி 77 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது. 66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி 3-வது இடத்திலும் உள்ளது.

இன்று வெற்றி பெற்றதன் மூலம் இந்த பட்டியலில் 58 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 50 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது. 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து அணி 6-வது இடத்தில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.