இன்று ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில்
“இந்தியாவை ஊக்குவிப்போம்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டோக்கியோவில் நடைபெறுகின்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர் வீராங்கனைகள் வெற்றி வாகை சூடும் பொருட்டு அவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவை ஊக்குவிப்போம் என்பதை குறிக்கும் I#CHEER 4I NDIA என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது .
அது சமயம் இன்று பள்ளி மைதானத்தில் வண்ண ஒலிம்பிக் வளையங்களைத் தரையில் வரைந்து
“இந்தியாவை ஊக்குவிப்போம் டோக்கியோ 2020 ”
என்னும் வாசகத்தை எழுதி, அதன் அருகில் நின்று கையை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் சை.சற்குணன் தலைமையில், பெரும் தோற்று காலத்தில் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்து சமூக இடைவெளி யோடு ஆசிரியர்களும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாணவ மாணவிகளும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள்.
தேசத்தை கட்டமைக்கும் முக்கிய பங்குகளில் ஒன்றான ஒலிம்பிக் முதலான போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்ட உதவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினார்.