Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியை சேர்ந்த அண்ணாவி உள்ளிட்டோர் மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகளப்போட்டியில் 9 பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

0

'- Advertisement -

மாலத்தீவில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட அண்ணாவி, 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அன்பழகன், மகளிர் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட பாக்கியலட்சுமி, ஞான சுகந்தி, ஆகியோர் 9 பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளனர்.இவர்களுக்கு தமிழக மற்றும் திருச்சி மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Ad banner

பதக்கம் வென்ற விவரம்:

1. M. அன்பழகன், ஆண்கள் (65+ ல்), வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம்.

2. N. அண்ணவி, ஆண்கள் (60+ பிரிவில்), குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் 3 தங்கங்கள்.

3. N. பாக்கியலட்சுமி, பெண்கள் (55+ பிரிவில் ), ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி.

4. O. ஞான சுகந்தி, பெண்கள் (55+, பிரிவில் ) குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் 2 தங்கங்கள் என மொத்தம்: 9 பதக்கங்கள் வேன்று உள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.