இலவச மருத்துவ முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் அழைப்பு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக தனியார் பபார்மசி உடன் இணைந்து 2024ம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக
1) 21 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை
2) வாசன் கண் மருத்துவமனையின் கண் பரிசோதனை
3) மேலும் தற்போது சீசன் ஜலதோஷம் அனைவருக்கும் வருவதால் நுரையீரல் பரிசோதனையும் ( LUNGS TEST ) செய்யப்படும்
இம்முகாம் வரும் (11/8/2026) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார் .

