திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த இசைக் கலைஞர் திடீர் சாவு
திருச்சி பொன்மலைப்பட்டி கான்வென்ட் தெருவை சேர்ந்தவர் எட்வர்ட் சனா ரோஸ் (வயது 53) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் இசை கலைஞராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் இருந்த காரணத்தால் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருடைய வலது கால் விரல் சர்க்கரை நோய் காரணமாக துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 20ந் தேதி வீட்டில் இருந்த எட்வர்ட்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையேடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

