Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்களுக்கு பல துன்பங்களை தரும் உதவாத பஞ்சபூர். பேருந்து திட்டத்தால் பயனடைந்தவர்கள் யார்?முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் கேள்வி

0

'- Advertisement -

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் குறித்து முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களை அவதிக்குள்ளாக்கும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.

Ad banner

கடந்த ஆட்சியில் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தால் ஆதாயம் அடைந்தவர்கள் யார்?

திருச்சி மக்கள் உபயோப்படுத்தாத இந்த பேருந்து திட்டத்தால் பயனடைந்தவர்கள் யார்?

திருச்சி வாழ் மக்கள், பூகோள அமைப்புப்படி, குறிப்பாக உறையூரில் இருக்கும் ஒருவர், பெரம்பலூர் செல்வதற்கு, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வருவதென்றால் பல அவதிகளை சந்திக்க நேரிடும்.

இதனால் பால் பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் போன்ற பகுதியில் அறிவிக்கப்படாத பேருந்து நிலையங்களாக திருச்சி மக்களால் உபயோகப்படுத்த பட்டு வருகிறது .

இப்பகுதிகளில் கழிப்பிடங்கள் உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மழை வெயில்களில் அவதிப்படும் குழந்தைகள், பெண்கள் என ஒட்டுமொத்த திருச்சி மக்களின் சாபத்தை வாங்கி கட்டப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை நோக்கம் என்ன?

அதற்கு அருகே புதிதாக காய்கறி மார்க்கெட்டை கொண்டு வந்தால், தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா?

இத்தகைய, மக்களுக்கு எவ்வகையிலும் உதவாத, இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மக்களுக்கு பல துன்பங்களை தரும் இந்த புதிய பேருந்து நிலையத்தை மூடி,

மீண்டும் மத்திய பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணம்.

இதனால் கட்டி முடிக்கப்பட்ட பஞ்சப்பூரில், கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா போல், சென்னையில் உள்ள உலக வர்த்தக அரங்கத்தை போல் மறு உருவாக்கம் செய்தால், திருச்சிராப்பள்ளியின் தொழில் முன்னேற்றத்திற்கு அது உதவுமே அன்றி, செலவழித்த பணம் வீணாகாது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் …

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.