திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் காளிமுத்து தலைமையில் தரைக் கடைகளை அகற்ற கோரி அமைச்சர் ரமேஷிடம் மனு,பெண்கள் கண்ணீர் கோரிக்கை
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் காளிமுத்து இன்று திருச்சி மாநகராட்சி வந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷை சந்தித்து மனு ஒன்றை அளித்தார், அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வயலூர் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநகராட்சி பகுதியில் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. அதனால் கடை வைத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடை வைத்திருப்போர் Trade Licence, FSSAI, குப்பை வரி, தராசு முத்திரை, கடை வாடகை, EB Bill, ஆட்கள் சம்பளம் இது போன்று செலவுகள் அதிகமாக இருக்கிறது.
ஆனால் இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் தரைக்கடைகள் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் பாதிப்புள்ளாகின்றனர். தாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

(இதற்கு முன்னர் கோ. அபிஷேகபுரம் மண்டல தலைவர், உதவி ஆணையர்,மாநகராட்சி மேயர்,இதுக்கு முன் இருந்த மாநகராட்சி ஆணையர்களிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை என கூறப்படுகிறது)
மனு அளிக்க வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் ஆனந்த் மற்றும் அனைத்து வியாபாரிகள் திரளாக வந்திருந்தனர் ….
மேலும் திருச்சி உறையூர் தினசரி சந்தை வியாபாரிகள் சார்பில் தினசரி சந்தையை உடனடியாக திறக்க கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர்,பின்னர் உறையூர் மார்க்கெட் சேர்ந்த பெண்கள் தினமும் வெயிலிலும் மழையிலும் மிகவும் சிரமப்படுகிறோம் உடனே எங்களுக்கு வழி செய்யுங்கள் என கண்ணீர் மல்க அமைச்சர் மற்றும் ஆணையர் பொன்மணியிடம் கோரிக்கை வைத்தனர் ..

