தவெக அரசை கண்டித்து
திருச்சியில் தொமுச பேரவை கவுன்சில் ஆர்ப்பாட்டம்.
ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு
மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக தவெக அரசையும் கண்டித்து தொமுச சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தொமுச செயலாளர் ச.ஜோசப் நெல்சன் தலைமையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது.
தொமுச துணைத் தலைவர் அ.இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.
துணதலைவர்கள் எஸ்.ராமலிங்கம்ஆ.சீதாராமன், மற்றும் துணை செயலாளர்கள் அ.ஆபிரகாம்,பெல்.என்.சரவணன்,கே.மலர்கண்ணன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாஸ்மாக் பேரவை செயலாளர் எம்.சிவபிரகாசம், பேரவை செயலாளர் தமிழ்ச் செல்வி ஆனந்தன்,எஸ்டிபிஐ மத்திய சங்க பொருளாளர் மு.கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.முடிவில் தொமுச பொருளாளர் மு.ரவீந்திரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப தர வேண்டும். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்சார சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும், தமிழக அரசு எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. ஸ்மாட் மீட்டர் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. போக்குவரத்தில் ஆயிரம் மின் பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. டாஸ்மார்க், அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரப்படுத்த கால முறை ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ..
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.எத்திராஜ்,பி.குணசேகரன்,கே.தீபன், மற்றும் இணைப்பு சங்கங்கள் கலந்து கொண்டன.

