லால்குடி அருகே

சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
லால்குடி அன்பில் ஜங்கம்மராஜபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64 ) இவர் அன்பில் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று உள்ளார். பின்னர் சாலையை கடக்க முயன்று உள்ளார் அப்போது லால்குடி அட்சர மாவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆறுமுகத்தின் மகள் மீனா அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை தனசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லைசென்ஸ் வாங்குவதற்கு முன்பாக சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

