திருச்சி பெரிய மிளகு பாறை புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் நிகழ்ச்சி.
திருச்சி பெரிய மிளகு பாறை

புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியறது. இதையாட்டி திருச்சி சின்ன மிளகுபாறை முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல் ஊர்வலமாக புறப்பட்டு வந்தது. இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு காவிரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பழநி காவடி எடுத்து மேள வாத்தியங்கள் முழங்க பால்குடம், தீர்த்தகுடம், அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் அழகு காவடியை பக்தர்கள் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக திரண்டு வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு 10 மணிக்கு விழா உய்யக்கொண்டான் ஆற்றில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் அம்மன் கோயில் வந்து அடைகிறார். பிறகு நாதஸ்வர கச்சேரி, சிலம்பாட்டம், மாடு மற்றும் மயிலாட்டம் வான வேடிக்கை நடைபெறுகிறது. நாளை 11 ந் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 8 மணி முதல் மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்குள் கஞ்சி காய்ச்சி ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல், திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 13ந் தேதி (புதன்கிழமை)
இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மனுக்கு விடையாற்றி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.மாவிளக்கு பூஜை செய்பவர்கள் காலை 8மணி முதல் 12 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.எனவே பொதுமக்கள் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

