நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது.

அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து இன்று காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். மேலும் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
விதிகளின் படி ஒருவர், இரு சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏவாக தொடர முடியாது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற முதன்மை செயலாளர் சீனிவாசனிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் வழங்கி உள்ளனர் .
எனவே திருச்சி கிழக்கு தொகுதிக்கு ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் மீண்டும் இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட தயாராகி வருகின்றன.

