Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டியில் கோயம்புத்தூர் அணி சாம்பியன்

0

'- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டியில் கோயம்புத்தூர் அணி சாம்பியன்

Ad banner

13-வது தமிழ்நாடு மாநில அளவிலான ​ சப்-ஜூனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்

​திருச்சி உடையான்பட்டியில் உள்ள ‘சாய் ஜி ரோல் பால் ஸ்கேட்டிங் அகாடமி மைதானத்தில் கடந்த14-ந்தேதி தொடங்கி நேற்று (16-ந்தேதி) வரை நடைபெற்றது. இப்போட்டியை ‘ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன்’ அமைப்பும், ‘திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல் பால் அசோசியேஷன்’ அமைப்பும் இணைந்து நடத்தின.

​ இதில் திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்தும் திரளான அணிகள் பங்கேற்றன.

​ஆண்கள் பிரிவு:

போட்டியின் இறுதிச் சுற்றில் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோயம்புத்தூர் அணி, 6-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி முதலிடத்தைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது

கோயம்புத்தூர்.

தஞ்சாவூர் இரண்டாவது இடத்தையும் திண்டுக்கல்  மூன்றாவது இடத்தையும் வென்றது.

​இப்போட்டியின் நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் திருச்சி சாய் ஜி ரோல் பால் ஸ்கேட்டிங் அகாடமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட சாய் ஜி ரோல் பால் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.மதுனிதா வரவேற்புரையாற்றினார்.

தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சுப்பிரமணியம், அருணா ஸ்போர்ட்ஸ் அரேனா தலைவர் அனுஷ் நாராயணன் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்குக் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர்.

​இவ்விழாவில்  ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மாநிலப் பொதுச்செயலாளர் சி. கோவிந்தராஜ்,  கேஐ ஐஏஎஸ் பிரீமியம் டர்ஃப் நிறுவனர் இலக்கியா சிவா, மாத்தூர் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சிஸ்டர் தீபா ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

​ விருத்தாசலம் கேகேடி ஸ்போர்ட்ஸ் அரேனா தலைவர் கோபிநாத், புதுக்கோட்டை ரோல் பால் சங்கத் தலைவர் எம். ஜெயக்குமார், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும் மாநில இணைச் செயலாளருமான சி. மணிகண்டன், மாநில இணைச் செயலாளர் எஸ். கண்மணி,மாநில ஆலோசகர் ராபின் ராஜகாந்த் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

​முடிவில், செய்தித் தொடர்பாளர் ஜி. குமரகுரு நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.