விராலிமலையில் வாழ்வாதாரம் இழந்த சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு திருச்சி நெற்றிக்கண் நிருபர்கள் நிவாரண உதவி.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா செல்லம்பட்டி பக்கத்தில் ராயம்பட்டி மேட்டில் சர்க்கஸ் காட்டி வித்தை செய்து பிழைப்பு நடத்தும் சுமார் 30 குடும்பங்கள் இந்த கொரனா காலத்தில் எந்த பிழைப்பும் இல்லாததால் குழந்தை குட்டிகளை வைத்து கொண்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
இவர்களைப் பற்றி தகவல் நெற்றிக்கண் அலுவலகத்திற்கு அந்த பகுதி அமமுக பிரமுகர் ஒருவர் மூலம் கவனத்திற்கு வந்தது.
உடனடியாக நமது நெற்றிக்கண் பத்திரிக்கை வார இதழ் சார்பாக நிருபர்கள் வால்மிகி , நந்தகுமார் ஆகியோர் 50 கிலோ அரிசி மற்றும் மளிகை, காய்கறி பொருட்களை எடுத்துக்கொண்டு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சென்று சர்க்கஸ் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து பொருட்களை கொடுத்தனர்.

அந்த பொருட்களை வாங்கிய அவர்கள் நிருபர்கள் வால்மீகி, நந்தகுமார் மற்றும் நெற்றிக்கண் நிர்வாகத்துக்கும் நன்றி பொங்க தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
மேலும் நாங்கள் டீ குடிக்க கூட வழியில்லாமல் இருக்கோம் இரண்டு வருடமா எந்த தொழிலும் இல்லை.
போன வருடம் அமைச்சரா இருந்த விஜயபாஸ்கர் உதவி செஞ்சாரு இந்த கொரனாவில் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இப்ப பெரிசா உதவி செய்தது நீங்கள் மட்டும் தான் என்றனர்.
அவர்கள் அத்தனை குடும்பமும் டீ சாப்பிட சிறு பண உதவியும் அளிக்கப்பட்டது.
முடிந்தால் இதை படிக்கும் நல் உள்ளம் கொண்டவர்கள் மேலும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.