திருச்சிராப்பள்ளி மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட்டில் கடைகள் திறக்க கோரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.
திருச்சிராப்பள்ளி மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியதாவது:-
காந்தி மார்க்கெட்டில் நிரந்தர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் மளிகை கடை வியாபாரிகளின் கடைகள் கடந்த 30.3.2020 முதல் அடைக்கப்பட்டு உள்ளது.
பழங்கள், காய்கறிகள், பூ வியாபாரிகள் மாற்று இடத்தில் வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில்
உரிமம் பெற்ற நிரந்தர கடைகளில் வியாபாரம் செய்யும் மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.
புதியதாக கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டிலும் மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகளுக்கான ஒரு கடை கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டி மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்றது.
நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தவறிய மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் மற்றும் தமிழக அரசையும் கண்டித்து வரும் ஜூன் 12ம் தேதி பிரபாத் தியேட்டர் அருகில் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது,
என திருச்சிராப்பள்ளி மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.