Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

30 வருடங்களாக அடிப்படை வசதி கூட இல்லாத திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் துரை வைகோ எம் பி யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

0

'- Advertisement -

திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மயில்வாகனம் தலைமையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி இடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Ad banner

அந்த மனுவில் குறிப்பிட்டள்ளதாவது:-

ஜெயம் நகர் உருவாகி 30 ஆண்டுகள் ஆகிறது இருப்பினும் அப்பகுதியில் காவிரி குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, எரியாத தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்காக எவ்வித வசதிகள் அரசு தரப்பில் செய்து கொடுக்கவில்லை. இதற்காக அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித செயல்பாடுகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி வாழ் மக்கள் இரவு நேரங்களில் கொசுக்கடி, பாம்பு கடி விஷப்பூச்சிகள் கடி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் பொதுமக்கள் தோல் வியாதி மற்றும் அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முழுமையான ஒரு தீர்வு ஏற்படும் என துரை வைகோ எம்பியிடம் மனு அளித்துள்ளார்கள்.

அதனைப் பெற்றுக் கொண்டு அவரும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் கார்த்திக், மகேஸ்வரன், இளங்கோ, தியாகராஜன், சங்கரநாராயணன், மணிமொழி. பிரேம்நாத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.