Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் தீவிர​வாத கும்​பலுடன் தொடர்பு.? என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை

0

'- Advertisement -

திருச்​சி​யில் சட்​ட​விரோதப் பணம் பரி​மாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்​சம் பணத்​துடன் கைது செய்​யப்​பட்ட 6 பேருக்​கும் சர்​வ​தேச ஹவாலா கும்​பலுடன் தொடர்பு இருப்​ப​தால், அமலாக்கத் துறை அதி​காரி​கள் விசா​ரிக்க உள்​ளனர்.

Ad banner

என்ஐஏ அதிகாரிகளும் கண்​காணித்து வரு​கின்​றனர்.

திருச்சி சுப்​பிரமணி​யபுரத்​தில் உள்ள ஒரு வீட்​டில் சந்​தேகத்தின் அடிப்​படை​யில் கே.கே.நகர் போலீ​ஸார் ஜூன் 4-ம் தேதி சோதனை நடத்​தினர். இதில், ரூ.14.40 லட்​சம் பணம், 150-க்​கும் மேற்​பட்ட ஏடிஎம் கார்​டு​கள், 50 செல்​போன்​கள், சிம் கார்​டு​கள் இருந்தன.

TVK ad

இதுதொடர்​பாக, வீட்​டில் தங்கியிருந்த 6 பேரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​திய​போது, முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​துள்​ளனர். இதையடுத்​து, ராமநாத​புரம் தமீம்​அன்​சா​ரி, உத்​திரகோசமங்​கை​ அஜ்மீர் அலி, பழனி​முரு​கன், பிர​வீன், முத்​தமிழ்ச்​செல்​வன், கோடிக்​குளம் ராஜ்கு​மார் ஆகிய 6 பேரை​யும் கைது செய்​து, 2 நாட்​களாக விசா​ரித்தனர். இதில் 6 பேரும் இந்​திய பணத்தை அமெரிக்க டால​ராக மாற்​று​வது, டாலரை இந்​தி​யா​வின் ரூபா​யாக மாற்​று​வது உள்​ளிட்ட சட்​ட ​விரோத பணப் பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். இதற்​காக ரூ.1 லட்​சத்​துக்கு ரூ.6,000 கமிஷன் கிடைத்​துள்​ளது. சிங்​கப்​பூரைச் சேர்ந்த ஒரு​வரின் வங்கி கணக்​குக்கு இவர்​கள் பணத்தை அனுப்பி   உள்​ளனர்.அவர்​களது உறவினர்​கள், நண்​பர்​கள், தெரிந்​தவர்​கள் என சாதாரண நபர்​களை வங்கி கணக்கு தொடங்கச் செய்​து, அவர்​களது ஏடிஎம் கார்​டு​கள் மூலம் இந்த பணப் பரிவர்த்​தனை​களை செய்​துள்​ளனர்.

கைது செய்​யப்​பட்ட 6 பேரும் திருச்சி 2-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இவர்​களுக்கு  சர்​வ​தேச  அளவி​லான ஹவாலா கும்​பலுடன் தொடர்பு இருப்​ப​து தெரிய​வந்​ததை அடுத்​து, அமலாக்கப் பிரிவு அதி​காரி​கள் விசா​ரணை நடத்தவுள்ளனர்.

கிரிப்டோ கரன்​ஸி, சட்​ட​விரோதப் பணப் பரிவர்த்​தனை, பங்கு வர்த்​தகம்  உள்​ளிட்​ட​வற்​றில் ஈடு​பட்​ட​தால் அவர்​களுக்​கும், தீவிர​வாத கும்​பலுக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்​ப​தால், என்ஐஏ அதி​காரி​கள் இந்த விவ​காரத்தை கூர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.