திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஒரு நாள் குடிநீர் ரத்து என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய், குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது.

இப்பணி 06.07.2026 இன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை செவ்வாய்க்கிழமை 07.07.2026 ஒருநாள் இருக்காது.
நாளை மறுநாள் புதன்கிழமை 08.07.2026 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

