முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,ஜவகர் முன்னிலையில் தவெகவில் இணைந்த திமுகவினர்
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் நேற்று மாலை 6:00 மணிக்கு தமிழக வெற்றிக்கழக நிறுவனத் தலைவர் விஜயின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடியேற்றி நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்குஅன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் முப்பெரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் தர்கா சௌகத்,மற்றும் வெல்லமண்டி ஜவர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

முன்னதாக பாலக்கரை பகுதி செயலாளர் கௌதமன் வரவேற்புரை ஆற்றினார்.சந்து கடை சந்துரு இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வுகளில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் நியூ மேன்,சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவா மற்றும் வட்ட செயலாளர்கள் மாரி தனபால் நிர்வாகிகள் பெட்டவாய்த்தலை ராமச்சந்திரன், செந்தில் , காஜா முஹம்மது, எஸ் பி கார்த்திக், பாஸ்கர், கண்ணன், தென்னூர் பிரேம், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

