செடாய் 3.0 அமைப்பின் பிரம்மாண்ட தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு.
திருச்சியில் செடாய் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், செடாய் 3.0 என்ற பெயரிலான மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் முருகானந்தம், ரோட்டரி ஆளுநர் கார்த்திக், செடாய் அமைப்பின் தலைவர் பகுருத்தீன், செயலாளர் குரு கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் நித்ய சந்திரசேகரன்,ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரிகள் பெரிய அளவில் வளர வேண்டும், உலகளவில் அவர்களது பிராண்ட் மதிப்பை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
சுயதொழில் தொடங்கும் பயணத்தில் ஆர்வம் காட்டும் எவரும், ஏற்கனவே புதிய தொழில் நடத்தி வரும் தொழிலதிபர்களும் இதில் உறுப்பினராக சேரலாம். தென்காசியில் தொடங்கி சென்னை வரை பரந்து விரிந்துள்ள இந்த அமைப்பில் தற்போது 650-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிராண்டிங் செய்வதற்கு இந்த அமைப்பு மிகச்சிறந்த தளமாக விளங்கும் என இதன் நிர்வாக இயக்குனர் அருள் சபரி தெரிவித்தார்.
மேலும், சுயதொழில் முனைவோர் குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்களை கொண்டு வந்தால் மாணவர்களிடம் சிறு வயது முதலே விழிப்புணர்வை வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

