Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி அருகே திருமண வீட்டில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி .

0

'- Advertisement -

லால்குடி அருகே திருமண வீட்டில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி .

 

Ad banner

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வடக்கு ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் மூவேந்தரன் (வயது 26)

இவர் நேற்று முன்தினம் திருச்சியில் லால்குடி பூ வாளூரில் உள்ள தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்து உள்ளார். பின்னர் அங்குள்ள திருமண மண்டபம் முன்பு மணமக்களை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்து இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பிளக்ஸ் பேனர் அங்கிருந்து டிரான்ஸ்பார்மரில் மோதியதில் மூவேந்தரனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு மூவேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் திருமண வீட்டை துக்க வீடாக மாற்றியது. உறவினர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த விபத்துக் குறித்து முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வீரபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.