லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு
லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால். அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
லால்குடி டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றை பார்வையிட்டனர். அதில், அழுகிய நிலையில் இரண்டு வாலிபர்கள் உடல்கள் குப்புற கிடந்தது தெரியவந்தது. மேலும், கிணற்றின் அருகில் கிடந்த லுங்கி, டீசர்ட், செருப்பு, மொபைல் மற்றும் அரிவாள், கடப்பாறை ஆகியவற்றை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து, லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இரண்டு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த போன் மற்றும் உடைகள் குறித்து
ஏற்கனவே லால்குடி காவல் நிலையத்தில் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அங்கு கிடைக்கப் பட்ட பொருட்களை அவரது உறவினர்களிடம் காண்பிக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதில் இறந்தவர்கள் கடலூர் மாவட்டம் கார் மாள்குடி புளியந்தோப்பு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெற்றிமணி வயது (45) மற்றும் ஈரோடு மாவட்டம் குளூர் பள்ளிக்கட்டு தோட்டத்தைச் சேர்ந்த ராஜா மகன் வீரமணி வயது (28) என தெரியவந்தது.
மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணையில் எழிலரசன் என்பவர் லால்குடி காவல் சரகபகுதியில் உள்ள பச்சம்பேட்டையில் உள்ள ஆசைத்தம்பி என்பவர் செங்கல்கால்வாயில் கடந்த 20 ஆண்டு காலமாக வேலை செய்து வருவதாகவும் அதன் அடிப்படையில் மாமா முறையில் உறவு முறையான வீரமணி என்பவரை வேலை செய்வதற்கு அழைத்ததன் பேரில் வீரமணி என்பவர் வேலை செய்ய இங்கு வந்து ஆசைதம்பி என்பவர் கால்வாயில் டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். அதன் பின்பு மீண்டும் எழிலரசன் தனது உறவினர் முறையில் அண்ணனான வெற்றிமணி என்பவரையும் வேலை செய்வதற்கு அழைத்து அவரும் பச்சாம்பேட்டையில் உள்ள ஆசைத்தம்பி செங்கல் கால்வாய்க்கு தனது குடும்பத்தினருடன் செங்கல் அறுக்கும்தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார்.அதன் பின்புஇருவரும் கடந்த 3.05.2026 காணாமல் போனதாக வெற்றிமணி மனைவி மாரியம்மாள் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இது சம்பந்தமாக வழக்கானது விசாரணையில் இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று இறந்தவர்களின் இரண்டு உடல்களும் லால்குடி குற்ற வழக்கில் காணாமல் போன வெற்றி மணி மற்றும் வீரமணி உடல்கள் என உறவினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து லால்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

