திருச்சி அறம் கல்வி தொண்டு நிறுவனம்,விசிக இணைந்து ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
திருச்சியில் வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு அறம் கல்வி தொண்டு நிறுவனம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பிலும் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரனோ தொற்று பாதிப்பினை தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்,
இதன் ஒரு பகுதியாக, திருச்சி அறம் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்டம் சார்பில் தில்லைநகர் காந்திபுரம் பகுதி உட்பட ஆறு பகுதிகளுக்கு 1000க்கும் மேற்பட்ட வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட தொகுப்பினை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நிஜாமுதீன், முகமதுமர்சூத் ஆகியோர் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டிமாரோ முருகானந்தம் பத்திரிகையாளர் கோபிநாத், விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் ரஞ்சித், ரகுநாத், விடுதலை (எ) விக்கி, சாகுல் ஹமீது , விசிக 55 ஆவது வட்ட செயலாளர் சதீஷ்குமார், கார்த்தி , திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஈ.பி. பாலாஜி, டைமண்ட் பஜார் வீரதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காந்திபுரத்தை தொடர்ந்து பாலன் முத்துநகர், வண்ணாரப்பேட்டை, சங்கீதபுரம், சின்னசாமி நகர், கீழக்கொல்லை, உள்ளிட்ட பகுதிகளிலும் வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டது.