தமன்னா இல்லாட்டி தர்ஷா.. என்னா இடுப்பு என்னா இடுப்பு.. உருகி வழியும் ரசிகர்கள்
சென்னை: பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா நாங்க வேற லெவல் என்று கொடி இடையை மொத்தமாக காட்டி ரசிகர்கள் கண்களுக்கு குளுமையை காட்டியிருக்கிறார் தர்ஷா குப்தா.
அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஷிவானி போனதிலிருந்து தர்ஷாவின் போட்டோக்கள்தான் காட்டுத் தீயாக பரவிக் கொண்டுள்ளன.
இன்ஸ்டாகிராமில் கலக்கிக்கொண்டு இருந்த ஷிவானி, ரம்யா பாண்டியன் இருவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டதால் அந்தக் குறையை தற்போது தர்ஷா தான் தீர்த்து வருகிறார்
தினசரி ஒரு எழில்
இவர் அடிக்கடி தினமும் தவறாமல் அப்லோட் பண்ணும் போஸ்ட்களுக்காக பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் இருக்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் கவர்ச்சி கூடுதலாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பார்வையாலே பாடாய்ப்படுத்தி வருகிறாராம்.
*செம ரசிகர் கூட்டம்*
இவருக்கு முதன்முதலில் அறிமுகமான முள்ளும் மலரும் சீரியலில் இருந்த ரசிகர்களை விட வில்லியாக செந்தூரப்பூவே சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் போது தான் அதிகமான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். அதைவிடவும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் கூடிவருகிறார்கள்.
*போட்டா போதும்*
இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் கவிதை மழைகளையும் அவருடைய ரசிகர்கள் பொழிவதில் தவறுவதில்லை. ரசிகர்களை ஏமாற்றாமல் வித விதமாக என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவருடைய போஸ்டுக்காகவே பல ரசிகர்கள் அடிக்கடி வந்து இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் இவர் இவருடைய ரசிகர்களின் ஒவ்வொரு கமெண்ட்களுக்கும் ரிப்ளையும் பண்ணுவற்குத் தவறுவதில்லை.
*நேரடி பதில்*
இப்படி இவரே நேரடியாக வந்து கருத்துப் போடுவதால் இவர் ரசிகர்களின் செல்ல தலைவியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைத்தனமான முக அழகும் வெகுளியான சிரிப்பும் தான் இவருக்கு அழகு.
*இடுப்பழகி*
ஆனால் அதை விட பல அழகு மேட்டர்கள் இவரிடம் உள்ளது. அவருடைய ரசிகர்களுக்கு இவர் அதுக்கு மேலயும் இருக்கிறது என்று இடுப்பை வளைத்து காட்டி சூடாக்கியிருக்கிறார். இந்த போட்டோஸ்களைப் பார்த்து பல ரசிகர்கள் கிறங்கி தான் போயிருக்கிறார்கள். அதுபோல தமன்னா இடையை போல இருக்கிறது என்றும் சிலர் ரம்யா பாண்டியனை தூக்கி விட்டு வந்துட்டீங்க என்று உருகுகிறார்கள்.
அதிலேயும் சிலர் நீங்க மட்டும்தான் ரொம்ப நல்லவங்க. ரசிகர்களை ஏமாற்றாமல் தினமும் ரசிகர்களுக்காக கடமை தவறாமல் போஸ்ட் போட்டுகிட்டு இருக்கீங்க. சிலர் எங்களை விட்டுட்டு போய் விட்டார்கள் என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் .அதிலும் அவர்கள் இல்லாத இடத்தை செமையாக பில் பண்ணி விட்டீர்கள் என்றும் அந்த இடுப்பையே உற்றுப் பார்த்து பெருமூச்சு விட்டு கொஞ்சி வருகிறார்கள்.