
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்குவலிப்பு ஏற்பட்டு சாவு
பெரம்பலூர் மாவட்டம் எலமனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 51) இவர் உடல்நிலை சரியில்லாமல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று ராஜாமணிக்கு திடீரென்று காக்கா வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி
ராஜாமணி பரிதாபமாக உயிர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

