Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இரவு முழுவதும் கனமழை..ஒரே இரவில் 1045.7 மில்லி மீட்டர் மழை பதிவு ..

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் இரவு முழுவதும் கனமழை..ஒரே இரவில் 1045.7 மில்லி மீட்டர் மழை பதிவு ..திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1045.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 85 சென்டிமீட்டர் மழை பதிவானது.

தொடர்ச்சியாக நேற்றும் இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. திருச்சி மத்திய பஸ் நிலையம், பாலக்கரை, தென்னூர், ஸ்ரீரங்கம் காந்தி மார்க்கெட், சத்திரம் பஸ் நிலையம், கருமண்டபம் , சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது

இதனால் கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி பகுதிகளில் பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாவது நாளாக இன்றும் மழை நீர் சூழ்ந்து கிடக்கிறது.

சாலைகளில் மழைநீர் தேங்கியது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார் பேட்டை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக துறையூர் தென்பர நாடு பகுதியில் 120 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின் வருமாறு;-

வாத்தலை அணைக்கட்டு 100.6, கல்லக்குடி 42.4 ,லால்குடி 24.4, நந்தியாறு அணைக்கட்டு 36.4, புள்ளம்பாடி 46.2, தேவி மங்கலம் 53.4, சமயபுரம் 67, சிறுகுடி 36.4, மணப்பாறை 18.4, பொன்னணி ஆறு அணை 43.4, கோவில்பட்டி 26.2, மருங்காபுரி 5.2, முசிறி 40, புலிவலம் 20, தாப்பேட்டை 42 ,நவலூர் கொட்டப்பட்டு 40 ,துவாக்குடி 25, கொப்பம்பட்டி 70 ,துறையூர் 38, பொன்மலை 46.2, திருச்சி ஏர்போர்ட் 28.6 ,திருச்சி ஜங்ஷன் 43.6, திருச்சி டவுன் 32.3 என மொத்தம் நேற்று ஒரு நாளில் மட்டும் மாவட்ட முழுவதும் 1045.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் நூறு சென்டிமீட்டர் மழை பதிவானது இதன் சராசரி மழை அளவு 43.57 ஆகும். தொடர் மழை காரணமாக திருச்சி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.