திருச்சியில் இடி மின்னலுடன் கனமழை; சுழங்கப்பாதையில் சிக்கிய பேருந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .அரசு மருத்துவமனையில் மின் வெட்டு நோயாளிகள் அவதி
திருச்சியில் இடி மின்னலுடன் கனமழை; சுழங்கப்பாதையில் சிக்கிய பேருந்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு …. ஒரே நாளில் 852 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது பொதுமக்கள் கடும் அவதி …
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இடி மின்னலுடன் சில மணி நேரம் நீடித்தது. விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திருச்சி பாரதிதாசன் சாலை, பாரதியார் சாலை ,மதுரை ரோடு, பாலக்கரை, தில்லை நகர் ,டிவிஎஸ் டோல்கேட் .. கரூர் பைபாஸ சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து சீர் செய்வதற்கு மணி நேரத்திற்கு மேல் ஆனது. இடி மின்னல் காரணமாக மாநகரில் பல இடங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
மாநகரில் உள்ள பிரதான சாலைகள் முதல் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன. மழை நீர் ஆறாக ஓடியது மேலபுதூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது.
அது சமயம் சுரங்க பாதையை கடக்க முயன்ற அரசு பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்றது.
பின்னர் அப்பகுதி இளைஞர்கள் பஸ்ஸில் பயணம் செய்த மாணவ மாணவிகள், முதியவர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பின்னர் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்களில் திருப்பி விடப்பட்டன.
திருச்சி ஆர் எம் எஸ் காலனி பகுதிகளில் பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது.
மேலும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
இதனால் அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இன்று அப்பகுதி கவுன்சிலர் மஞ்சுளா தேவி தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சாலைகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி கமிஷனர் பொன்மணி நேற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் மழைநீர் வடியும் பகுதிகளில் தேங்கிய மண்ணை அகற்றி தண்ணீர் வெளியேற்றினார். இதே போன்று மாநகர பகுதிகளில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் .
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டிடத்தில் உள்ள வார்டுகளுக்குள் மழை நீர் புகுந்தது இதனால் அந்த வார்டுகளில் மின்சாரம் ரத்தானது இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சென்று அந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக
நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் 109 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருச்சி டவுன் பகுதியில் 88 , திருச்சி ஜங்ஷன் பகுதியில் 81.6 , பொன்மலை பகுதியில் 64.4, திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 64.7 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு கள்ளக்குடி 15.4, லால்குடி 18.6, நந்தியாறு அணைக்கட்டு 19, புள்ளம்பாடி 16.2 ,தேவி மங்கலம் 14.2 ,சமயபுரம் 33.4 ,சிறுகுடி 10.4,
வாத்தலை அணைக்கட்டு 44.2 ,மணப்பாறை 9.6, பொன்னணிஆறு அணை 47, கோவில்பட்டி 47.2 ,மருங்காபுரி 46.2, முசிறி 31 ,புலிவலம் 3 தாப்பேட்டை 10, துவாக்குடி 26.3 கொப்பம்பட்டி 12 தென்பர நாடு 36 துறையூர் 5 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 52.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் சராசரி மழையளவு 35.52 ஆகும். கனமழையால் திருச்சி மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

