Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தொடரும் அவலம்

0

'- Advertisement -

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தொடரும் அவலம் கோவை பயணியிடம் ரூ45 ஆயிரம் பணம், செல்போன் திருட்டு வாலிபர் கைது

Ad banner

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் ஞானராஜ் (வயது 44 )இவர் திருச்சியில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக கோவையிலிருந்து பேருந்தில் திருச்சி வந்தார். பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தார் அப்பொழுது மர்ம ஆசாமி ஒருவர் அந்தோணிராஜ் அருகில் வந்து அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 45 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது தொடர்பாக அந்தோணி ராஜ் சத்தம் போட்ட உடன் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் போலீசார் அந்த மர்ம ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் லால்குடி பள்ளிவாசல் சாலை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 18) என தெரியவந்தது.இதை அடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.