Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராம்ஜி நகர் பெட்ரோல் பங்க் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பிறகு அங்கு ( 37 வயது) ஓர் பெண் மற்றும் ரிஷிகேஷ் (வயது 19) என்ற வாலிபர் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் உட்பட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 135 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து கழகம் அலுவலகம் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பீமநகர் மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்த ஆடம் பவுல் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.