Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

0

'- Advertisement -

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

Ad banner

திருச்சி பீமநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 43 ) இவர் தில்லைநகர் 11 வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் கம்பெனியை அணுகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு பேசி உள்ளார்.

இதையடுத்து அந்த டிராவல்ஸ் ஏஜென்சியில் ஊழியராக வேலை பார்த்த மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் அவரிடம் ஆசை வார்த்தை கூறி வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி அவருடைய நண்பர்கள் 6 பேரிடம் தலா ரூபாய் 10 லட்சத்தி 80 ஆயிரம் பணத்தை வசூல் செய்து உள்ளனர். பிறகு அவர்களுக்கு விசா மற்றும் வேலையும் வாங்கி தரவில்லை. இது தொடர்பாக பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் ஏதும் அளிக்காமல் அழக்களித்து வந்துள்ளனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த சையது இப்ராஹிம் தில்லை நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல் நிலைய போலீசார் டிராவல்ஸ் ஏஜென்சியை நடத்தி வரும் மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரி பஞ்சனா, வேல்முருகன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.