
திருச்சி மாநகராட்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் பகுதியில் பராமரிப்புகளுக்காக மின் விநியோகம் செவ்வாய்க்கிழமை தடை செய்யப்படுகிறது. எனவே, மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறுகள்1,2,3, மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிலும் மின்சாரம் இருக்காது.
எனவே, ஸ்ரீரங்கம் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட விறகுப்பேட்டை, மஹா லக்ஷ்மிநகர் நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம்,
பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர் ஜே.கே நகர், மேல கல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையப்பகுதிகள், காமராஜ் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர்
மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர்பகுதி, எடமலை பட்டிப்புதூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை செப்டெம்பர் 13 ஆம் தேதி, குடிநீர் விநியோகம் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

