
திருச்சி தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை 17 ந்தேதி பொன்மலை ஆர்மரி கேட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவை சேர்ந்த ரவுடி பிராங்கிளின் ஜோசப் ராஜ் (வயது 31) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து பொன்மலை காவல் நிலைய போலீசாரிம் விஜயகுமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பிராங்கிளின் ஜோசப் ராஜை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

