Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வர் விஜய்யை சந்திப்பதெல்லாம் குதிரை கொம்பாக இருக்கிறது. சீனியர் என்ற மரியாதை கூட தவெகவில் இருப்பதில்லை. அப்படி இணைந்தால் வீட்டிலேயே அமைதியாக இருக்க தான் வேண்டும்.எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

'- Advertisement -

அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வர முடிவு செய்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை கடம்பூர் ராஜூ அலர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Ad banner

தவெகவில் இணைந்தபின் அமைச்சர்களை பார்க்கவே நேரம் கொடுக்கப்படவில்லை என்று புலம்பி இருக்கும் கடம்பூர் ராஜூ, சீனியர் நிர்வாகி என்றே மரியாதையும் இல்லை என்றும் புலம்பி இருக்கிறார். இதனால் அதிமுகவினர் எடுத்த முடிவை தள்ளி போட்டிருக்கின்றன்ர்.

 

தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் அதிமுகவில் இருந்து சாரை சாரையாக நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தொடங்கினர். ஒவ்வொரு சனிக்கிழமையும் பனையூரில் இணைப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால் இரு விஜயபாஸ்கர்கள் இணைந்த பின், அதிமுகவில் இருந்து தவெக பக்கம் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

 

எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்புடன் தவெக தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் தவெகவில் இணையும் முடிவை இதுவரை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களின் புலம்பல்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் தவெகவில் இணைந்த அதிமுகவினர் யாருக்கும் புதிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுகவில் இருந்து யாரும் தவெக பக்கமே வந்துவிடாதீர்கள்.. நமக்கு இருக்கும் ஆதரவாளர்களுக்கு கொஞ்சமும் மரியாதை இருக்காது. தவெகவில் இணைந்த நாளன்று அமைச்சர்களை பார்க்க முடிந்தது.

 

அதன்பின் அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டாலும் கொடுக்க மறுக்கிறார்கள். முதல்வர் விஜய்யை சந்திப்பதெல்லாம் குதிரை கொம்பாக இருக்கிறது. சீனியர் என்ற மரியாதை கூட தவெகவில் இருப்பதில்லை. அப்படி இணைந்தால் வீட்டிலேயே அமைதியாக இருக்க வேண்டும்தான் என்று எச்சரித்துள்ளார். இதனால் தவெகவில் இணையலாம் என்ற முடிவு எடுக்க முடியாமல் அதிமுகவினர் பீதியில் இருக்கின்றனர்.

திமுகவிலும் கூட எந்த அதிமுக முன்னாள் அமைச்சருக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. அவர்கள் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு தவெக மட்டும்தான். எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் பதவியை கொடுக்க மறுப்பதால், என்ன செய்வதென புரியாமல் அதிமுக சீனியர் நிர்வாகிகள் அமைதி காக்கின்றனர்.

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.