திருச்சி : எஸ். ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினரை நாய்கள் என தரக்குறைவாக பேசிய டி.ஆர்.இ.யு. சங்க பொதுச் செயலாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம். யு. ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளரும்போட்ட செயலாளருமான வீரசேகரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் எஸ். ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினரை நாய்கள் என தரக்குறைவாக பேசிய டி.ஆர்.இ.யு. சங்கத்தின் பொதுச் செயலாளரை கண்டித்தும் ,நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான எஸ் ஆர் எம் யு தொழிலாளர்கள் கலந்து கொண்டு டி ஆர் இ யூ தொழிற்சங்க செயலாளர் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

