
திருச்சி பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காளியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38) இவர் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை, இதையடுத்து மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பிரபு எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் அந்த சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

